×

ஆலத்தூர் அருகே குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நாரணமங்கலம்- மருதடி சாலை விரைந்து சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

பாடாலூர், ஏப். 22: ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்திலிருந்து மருதடி செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதடி கிராமத்துக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் மருதடி, ஈச்சங்காடு, நாட்டார்மங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரம்பலூர், சிறுவாச்சூர் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் மாட்டு வண்டிகள் செல்ல வேண்டும். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட அனைத்து இடுபொருள்களையும் எடுத்து செல்ல வேண்டும்.

இதுபோல் விவசாய நிலங்களில் விளையும் தானியங்களையும் வீட்டுக்கு எடுத்துவர வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சாலையின் வழியாக சென்றுவர வேண்டும். இச்சாலை வழியாக செல்லும் தனியார் பள்ளி பேருந்துகள், இப்பகுதியில் உள்ள கிரசர்களிலிருந்து ஜல்லி ஏற்றி வரும் லாரிகள் என பல்வேறு பயன்பாட்டுக்கு இந்த சாலை பயன்பட்டு வருகிறது. ஆனால் இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும்  தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். நடந்த கூட இந்த சாலையில் செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Alathur ,Maruthi ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை